ஊரடங்கு நேரத்திலும் கட்டண உயர்வை அமல்படுத்திய தமிழக சுங்க சாவடிகள்.!

Default Image

தமிழத்தில் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கசாவடிகளில் ஊரடங்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தி வசூல் செய்து வருகின்றனராம்.

நாடு முழுவதும் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்தது. ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பெரும்பாலும் வாகனங்கள் இயக்கபடுகின்றன. அந்த நேரத்திலும் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வருடந்தோறும் ஏப்ரல் மாதம் சுங்ககட்டணத்தில் விலை உயர்வு இருக்கும், தமிழத்தில் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கசாவடிகளில் ஊரடங்கு காலத்திலும் கடமை தவறாமல் புதிய கட்டணத்தை அமல்படுத்தி வசூல் செய்து வருகின்றனராம். இந்த புதிய கட்டண உயர்வு 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை இருக்கிறது என கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில்உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்