ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.!
வரும் ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 29 டோல்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கட்டண உயர்வு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 55 டோல்கள் இருக்கின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1இல் கட்டணம் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.