சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக உள்ளன,.! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விமர்சனம்.!

Madurai Court

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்கக்கோரிய வழக்கில்  தேசிய நெடுஞ்சாலைத்துறை, நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்க வில்லை, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதிலேயே சுங்கச்சாவடிகள் குறியாக உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர், மதுரை நெடுஞ்சாலையில் கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கயத்தாறு எல்லைக்குட்பட்ட பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுங்கச்சவடிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாலைகளை சரி செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளை முறையாக பராமரிக்கவில்லை, சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கவனமாக உள்ளனர் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் ஒரே இடத்தில் 14 விபத்துகள் நடந்துள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுவில் இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்