சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன்..!
சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு.
மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
முதியோருக்கு மாதம் 10 டோக்கன் வீதம், 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும்,சென்னையில் உள்ள 40 பணிமனை அலுவலகங்களில் இந்த டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.