தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 13 வகையான மளிகை பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான டோக்கன், இன்று முதல் 4-ம் தேதி வரை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வ்ரளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து தற்போது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டும் மத்தியஅரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைத்து பரவலை உடனடியாக தடுக்கும் பொருட்டு 07.06.2021 முடிய அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஆணையிடப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
இருப்பினும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து இன்றியமையாப் பண்டங்கள் மற்றும் கொரோனா நிவாரணத் தொகை உள்ளிட்ட அதீத மான்யத்துடன் கூடிய நல உதவிகள் தொடர்ந்து பெறும் வண்ணம் நியாய விலைக் கடைகள் தினந்தோறும் காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 வரை செயல்பட அனுமதித்து செயல்பாட்டில் உள்ளது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் வண்ணம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது போலவே ஜுன் 2021 மாத பொது விநியோகத் திட்ட செயள பாட்டினையும் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகா வண்ணம் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தினை பாதுகாப்புடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 01.06.2021 முதல் 04.06.2021 முடிய 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள். அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டநாள் / நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அவருக்குண்டான கொரோனா நிவாரண கூடுதல் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பண்டங்களை (துவரம் பருப்பு)பெற்றுச் செல்ல வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…