ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி…கூட்டுறவுத்துறை செயலாளர் அசத்தல் அறிவிப்பு.!!
ரேஷன் கடைகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தின் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக கட்டப்படும் வரும் அனைத்து ரேஷன் கடைகளும் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த 1 ஆண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளில் கழிப்பறைகள் அமைக்கப்படும். ரேஷன் கடைகளில் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக அரசின் கொள்கை ரீதியான அறிவிப்பு உள்ளது.
ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை புனரமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.