இன்றைய முக்கிய செய்திகள் சுடச் சுட- 23rd,March
சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றம்.
இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், ஆளுநர் கையெழுத்திடாமல் இருந்ததையும் குறிப்பிட்டு பேசினார். இறுதியாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவானது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
முழுவதும் படிக்க – ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்.! சபாநாயகர் அறிவிப்பு.!
ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.
கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு ஜாமீனும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முழுவதும் படிக்க – #BREAKING : ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
கூகுலின் சேவைகள் உலகம் முழுவதும் முடக்கம்.
உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுலின் சேவைகள், உலகம் முழுவதும் முடங்கியது, முக்கியமாக அதன் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட சேவைகள் வேலை செய்யவில்லை என அதன் பயனர்கள் தெரிவித்து வந்தனர். டௌன்டிடெக்டர் வெளியிட்ட தகவின்படி, ஜிமெயில் இல் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் 502 எரர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் சற்று நேரம் கழித்து யூட்யூப் தளம், ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகள் மீண்டும் செயல்படத்தொடங்கியது.
முழுவதும் படிக்க – உலகம் முழுவதும் முடங்கிய கூகுள் சேவைகள்.!
ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் எதிர்ப்பு :
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார். இதற்கு இபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒவ்வொரு நபர் பேச வேண்டும் என்றே முதலில் கூறினீர்கள். எங்கள் அதிமுக சார்பில் ஏற்கனவே ஒருவர் பேசிவிட்டார். அடுத்ததாக அதிமுக சார்பில் என இவரை (ஓபிஎஸ்) எதற்காக பேச அனுமதித்தீர்கள்? என ஆவேசமாக பேசினார்.
முழுவதும் படிக்க – சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பேச ஓபிஎஸ் யார்.? – இபிஎஸ் ஆவேச பேச்சு.!
பிரிட்டன் இளவரசர் வில்லியம் உக்ரைன் நாட்டிற்கு திடீர் வருகை.
மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் வேல்ஸ் இளவரசி டயானா அவர்களின் மூத்த மகனும், இங்கிலாந்து நாட்டின் இளவரசரும் ஆன வில்லியம் நேற்று திடீர் வருகையாக போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சென்றுள்ளார். தென்கிழக்கு போலந்து நாட்டின் மாகாணமான ரோசெஸ்வ்வ் நகரில் சுமார் 20,000 மக்கள் வசிக்கின்றனர். அங்கு சென்ற இளவரசர் வில்லியம், உக்ரைனிலில் இருக்கும் பிரிட்டிஷ் மற்றும் போலந்து நாட்டு வீரர்களை சந்தித்து பேசினார். மேலும் நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைன்னுக்கு தேவையான உதவிகளை வீரர்கள் செய்வதை மேற்பார்வையிட்டார்.
முழுவதும் படிக்க – உக்ரைன் எல்லையில் பிரிட்டன் இளவரசர் திடீர் வருகை.. ஆச்சரியத்தில் உறைந்த வீரர்கள்..!
மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு :
புதுச்சேரியில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தடைக்கால நிவாரணத்தை ரூ.5,500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தியும், மீனவர்களுக்கு பேரிடர் கால நிதியுதவியை ரூ.2,500ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தியும் புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
முழுவதும் படிக்க – புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6500 ஆக உயர்வு.! துணை நிலை ஆளுநர் ஒப்புதல்
மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி :
தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்க குழுவின் கூட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை 100% அமல்படுத்துவதை வலியுறுத்தி செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் இந்தி கற்றுக் கொள்வதற்கான வசதிகள், இந்தி இலக்கியம், இலக்கணம் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுவதும் படிக்க – மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி..! செயலி வெளியிட்டது தெற்கு ரயில்வே..!