குடியுரிமை திருத்தச்சட்ட எதிராக இன்று பேரணி
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை திருத்தச்சட்ட எதிராக இன்று பேரணி நடைபெறுகிறது.
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று (டிசம்பர் 23ஆம் தேதி) பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..
இதனால் அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர், மாணவர்கள், திரைத்துறையினர், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் சென்னையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்றும் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளுக்கும் ஸ்டாலின் கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்.இன்று திமுக சார்பாக பேரணி நடைபெறுகிறது.சி.எம்.டி.ஏ. அலுவலகம் அருகில் உள்ள சந்திப்பில் இருந்து புறப்படும் பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நிறைவடைகிறது.இதற்காக அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.