இன்றைய பெட்ரோல் & டீசல் விலை..!!
- சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 96.23 ரூபாய்க்கு விற்பனை.
- டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாய்க்கு விற்பனை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.ஆனாலும் ,பெட்ரோல்,டீசல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் கண்டுதான் வருகிறது.
அந்த வகையில் இன்றயை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்படாமல் லிட்டர் 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.