இன்றைய பெட்ரோல்,டீசல் விலை – ஜன.26 முதல் லிட்டருக்கு ரூ.25 குறைப்பு…எங்கு தெரியுமா?!

Published by
Edison

சென்னை:81-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்த வேளையில்,மத்திய அரசின் கலால் வரி குறைப்பால்,தீபாவளிக்கு பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.81-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

இதற்கிடையில்,ஜார்கண்ட் மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்படும் என்றும்,வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி முதல் இந்த புதிய விலை குறைப்பு அமலுக்கு வரும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதன்படி,ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

3 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago