சென்னையில் இன்று (அக்-19), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 9.50 ரூபாயும், டீசல் விலை கிட்டத்தட்ட 7 ரூபாயும் குறைந்து இத்தனை நாளாக விற்கப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து மே 22ம் தேதி பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் க்கு விற்பனை செய்யப்பட்டது. 151 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று(அக்-19) 151 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து 1லிட்டர், ரூ.102.73க்கும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…