இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் – மாற்றம் உண்டா?..!

சென்னை:இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.40 ரூபாய்க்கும்,ஒரு லிட்டர் டீசல் விலை 91.43 ரூபாய்க்கும் 45 வது நாளாக மாற்றமின்றி ஒரே விலையில் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
எனினும்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.எனினும்,தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகின்றன.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.45 வது நாளான இன்றும் மாற்றமில்லாமல் ஒரே விலையிலேயே பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025