#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் – சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
சென்னை:8-வது நாளாக மாற்றமின்றி இன்று பெட்ரோல்,டீசல் விற்பனை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில தினங்களாக பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயர்த்தப்படாமல் உள்ளது.எனினும், இதுவரை உயர்த்திய பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்,சென்னையில் இன்று 8-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.