Today’s Live : ஜார்சுகுடா இடைத்தேர்தல்..! நபா கிஷோர் தாஸின் மகள் வேட்பாளராக அறிவிப்பு..!
ஜார்சுகுடா இடைத்தேர்தல் :
ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்ட சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸின் மகள் திபாலி தாஸின் பெயரை பிஜு ஜனதா தளம் (BJD) அறிவித்துள்ளது.
31.03.2023 3.50 PM
டிடிவி தினகரன் விமர்சனம் :
இரட்டை இலையும், அதிமுகவும் இபிஎஸ் இடம் இருப்பதால் பலவீனமாகி கொண்டு இருக்கிறது. துரோகத்தின் மூலம் பதவியை பிடித்துள்ள இபிஎஸ் தரப்பினர் அதற்கான பதிலை எதிர்காலத்தில் கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜகதான் காரணம், அவர்கள் நினைத்தால்தான், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மீண்டும் இணைய முடியும் என்று டிடிவி தினகரன் விமரிச்சித்துள்ளார்.
31.03.2023 3.00 PM
பறக்கும் படை குழு சோதனை:
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை, தொட்டபல்லாபூரில் உள்ள ஸ்ரீகாட்டி சுப்ரமணிய கோயிலுக்குச் சென்றபோது, தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை குழுவினர் சோதனையிட்டனர். மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Karnataka CM Basavaraj Bommai’s car checked by the Flying Squad team of the Election Commission as he was on his way to Sri Ghati Subramanya Temple in Doddaballapur
Model Code of Conduct is enforced in the State in view of the May 10 Assembly elections. pic.twitter.com/esBkFcIMAL
— ANI (@ANI) March 31, 2023
31.03.2023 1.25 PM
சென்னையில் டாஸ்மாக் கடை மூடல் :
மகாவீர் ஜெயந்தியையொட்டி ஏப்ரல் 4ம் தேதி சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி மதுபானத்தை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
31.03.2023 12.30 PM
தமிழ்நாட்டுக்கு மேலும் 11 புவிசார் குறியீடுகள் :
தமிழ்நாட்டில் மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்டங்கள், மார்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வறுக்கி ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி, உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
31.03.2023 10.55 AM
மாநில அந்தஸ்து :
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
31.03.2023 10.40 AM
தற்கொலை :
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஹோட்டல் அறையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அறையில் தற்கொலை குறிப்பு ஒன்றை கண்டுபிடித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
31.03.2023 10.10 AM