Today’s Live: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவே தமிழகம் வருகிறார்..!

Amit shah Jairam Sengol

அமித்ஷா தமிழகம் வருகை:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒருநாள் முன்னதாக நாளை இரவே தமிழகம் வருகிறார். மேலும், 11-ஆம் தேதி சென்னை கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற பொறுப்பாளர்களுடன் சென்னையில் ஆலோசிக்கிறார். பின்னர் அன்று பிற்பகல் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்:

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பதில் திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. என்று கூறியுள்ளார்.

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்:

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக எழுந்த புகாரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை, அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளாளர் எடப்பாடி பழனிச்சாமி தலமையில் வரும் ஜூன் 13ஆம் தேதி  நடைபெற உள்ளது.

2000 ரூபாய் நோட்டு விவகாரம்:

குடிமக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை எந்தவித கோரிக்கை சீட்டு மற்றும் அடையாளச் சான்றும் இல்லாமல் மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கியின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து தெரிவித்துள்ளது.

புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி:

தமிழ்நாட்டில் 3 தனியார் கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானாவுக்கு மட்டும் 12 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இன்றைய (9.6.2023) பெட்ரோல், டீசல் விலை:

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் 384-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்:

  • புழல் ஏரியில் நீர்இருப்பு 2173 மில்லியன் கனஅடியாக உள்ளது, நீர்வரத்து 200 கனஅடியாக உள்ளது.
  • சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 617 மில்லியன் கனஅடியாக உள்ளது, 200 கனஅடி நீர் வெளியேற்றம்.
  • கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 446 மில்லியன் கனஅடியாக உள்ளது, 15 கனஅடி நீர் வெளியேற்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்