இன்று ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற போராட்டம் …!தற்காலிமாக ஒத்திவைப்பு …!ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Published by
Venu

இன்று நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.
ஆனால் “ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.புயல் நிவாரண பணிகளுக்கு தொய்வு ஏற்படாமல் இருக்க அரசு ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
Image result for ஜாக்டோ

இதன் பின்னர் சென்னை திருவல்லிக்கேனியில் ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்த பின்னர் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில்,திட்டமிட்டபடி டிசம்பர் 4 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை செய்யப்படும். பேச்சு நடத்தாவிடில் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும்.ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5 ஆம் தேதியும் அவரது படத்தை கையில் ஏந்தியும், டிசம்பர் 7 ஆம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
 
இந்நிலையில் லோகநாதன் என்பவர் மதுரை உயர்நநீதிமன்ற கிளையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த  மதுரை உயர்நநீதிமன்ற கிளை,ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வரும் 10 ஆம் தேதி வரை ஒத்தி வைக்க முடியுமா என கேள்வி எழுப்பியது.பின்னர் வழக்கை நேற்று  பிற்பகலுக்கு ஒத்திவைத்தது மதுரை உயர்நநீதிமன்ற கிளை.
இதன்பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.இதில்  ஜாக்டோ ஜியோ சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று  நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன்பின்  விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒருநபர் குழு பரிந்துரை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Published by
Venu

Recent Posts

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

29 minutes ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

2 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

2 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

3 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

3 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

3 hours ago