செந்தில் பாலாஜி வழக்கில் இரு தரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ள நிலையில், முக்கிய முடிவு எடுக்கவுள்ளார் 3வது நீதிபதி.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் நடைபெற்றது. முதல் நாள் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், 2வது நாள் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை.
காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும், புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது என பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதுபோன்று, குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தில் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் ஆட்கொண்ர்வு மனு மீது ஜூலை 14ம் தேதி (இன்று) விசாரணை முடிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்பட உள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன் விசாரணையை முடக்க யாருக்கும் உரிமை இல்லை என பதிலடி கொடுத்தது. எனவே இரு தரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ளன. இதன் அடிப்படையில் 3வது நீதிபதி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார். இதனால் செந்தில் பாலாஜியின் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…