510-வது நாளாக பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 58.00 அல்லது 0.83% என குறைந்து ரூ.7,075 ஆக உள்ளது.
கச்சா எண்ணெய விலை குறைந்தபோதிலும் 510-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…