#TodayPrice:39-வது நாளாக மாறாத பெட்ரோல்,டீசல் விலை!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,39-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
- அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.62-க்கு மாற்றமின்றி விற்பனை.
- மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.27 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.95.84-க்கு விற்பனை.
- கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.03 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.92.76-க்கு மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது.