#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலை உயர்வா? – இன்றைய நிலவரம் என்ன?..!
பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் இன்று 22-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்த போதிலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. எனினும், பெட்ரோல்,டீசல் ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே, பெட்ரோல் டீசல் விலை சதத்தை விட்டு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.
இதனிடையே,கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்தது போன்று,தமிழகம்,தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை.இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.