சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அந்த வகையில்,சென்னையில் இன்று 33-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே,கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலருக்கும் குறைவாக இருக்கும் வரை,பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காது என மத்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியிருந்த நிலையில், தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:
தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice <Space>Dealer Code ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…