TodayPrice:சென்னையில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 9.50 ரூபாயும், டீசல் விலை கிட்டத்தட்ட 7 ரூபாயும் குறைந்தது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை.
இதனைத்தொடர்ந்து மே 22ம் தேதி பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு 117 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று(செப் 16) 118-வது நாளாக பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல், பொது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்த பெட்ரோல், டீசல் கடந்த சில காலமாகவே சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் ஒரு விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஆகியும் விலையேற்றம் ஏதுமில்லாமல் விற்கப்படுகிறது.