#TodayPrice:சதத்தை விட்டு குறையாத பெட்ரோல்,டீசல் விலை – வாகன ஓட்டிகள் கலக்கம்!!
சென்னை:9-வது நாளாக மாற்றமின்றி இன்று பெட்ரோல்,டீசல் விற்பனை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டாலும்,நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தெடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் இன்று 9-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எனினும்,பெட்ரோல்,டீசல் விலையை கேட்டாலே வாகன ஓட்டிகளுக்கு தலை சுற்றலே ஏற்படும் நிலைதான் நிலவுகிறது.எனவே,இனி வரும் நாட்களிலாவது சதத்தை விட்டு பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் விரும்புகின்றனர். இதனிடையே, பெட்ரோல்,டீசல் விலை அதிகரிப்பால் பலர் மின்சார வாகனங்களை நோக்கி படையெடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.