#TodayPrice:பெட்ரோல்,டீசல் விலை உயர வாய்ப்பு? – இன்றைய நிலவரம் என்ன?..!

Published by
Edison

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,சென்னையில் இன்று 34-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இதனால்,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

  • அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது.
  • தற்போது, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51 ஆகவும், டீசல் ரூ.104.77 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.115.12 ஆகவும், டீசல் ரூ.99.83 ஆகவும் மாற்றமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே,கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலருக்கும் குறைவாக இருக்கும் வரை,பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காது என மத்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியிருந்த நிலையில், தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:

தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice <Space>Dealer Code ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.

Recent Posts

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

11 minutes ago

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

1 hour ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

2 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

3 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

3 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

3 hours ago