#TodayPrice:ஒரு மாதமாக 100-ஐ விட்டு குறையாத பெட்ரோல்,டீசல் விலை!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
இந்த நிலையில்,உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டன.ஆனால்,டெல்லி, மும்பை,சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் நான்கு பெருநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அந்த வகையில்,சென்னையில் இன்று 30-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- அதைப்போல,டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது.
- தற்போது, மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51 ஆகவும், டீசல் ரூ.104.77 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
- கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.115.12 ஆகவும், டீசல் ரூ.99.83 ஆகவும் மாற்றமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து 30 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:
தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் 9223112222 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம்.அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.