#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டு ரூ.10 வரை அதிகரித்தது.உள்ளூர் வரிகள்,VAT (மதிப்புக் கூட்டப்பட்ட வரி),சரக்குக் கட்டணம் போன்ற காரணிகளைப் பொறுத்து பெட்ரோல் விலையில் மாற்றம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
இந்நிலையில்,சென்னையில் இன்று 27-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து 27 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025