#Breaking:தங்கம் விலை உயர்வு – ஒரு சவரன் இவ்வளவா? – இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!
சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.36,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம்.ஏனெனில்,அது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது.ஆனால்,தங்கம் விலையை பொறுத்தவரை,நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமாக உள்ளது.அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டது.எனினும்,நேற்று தங்கம் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.36,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால்,சில்லறை வணிகத்தில் வெள்ளி விலை 30 காசு குறைந்து ஒரு கிராம் ரூ.65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.