இன்று கீழடி அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த பணியின் போது எலும்புக்கூடுகள், நாணயம் மணிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பழந்தமிழரின் புகழை உலகறியச் செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கீழடியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12.25 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டுவார் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.