இன்று “தமிழ்நாடு” தினம் கொண்டாட்டம்.. என் இதனை கொண்டாடுகின்றனர்? வரலாறு குறித்து காணலாம்!
இன்று தமிழ்நாடு மக்களால் கொண்டாடப்படும் “தமிழ்நாடு தினம்” குறித்த வரலாற்றை அறிவோம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 8 ஆம் ஆண்டில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரள ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி, “மெட்ராஸ் பிரசிடென்சி” என ஒரு மாநிலமாக இருந்தது. இதனை மாற்றக்கோரி, சென்னை பொட்டி ஸ்ரீராமுலு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது அவர் உயிரிழக்க, அதனைத்தொடர்ந்து தந்தை பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, காமராசர் உட்பட பலர் போராட்டம் நடத்தியன் மூலம், 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, “மெட்ராஸ்” என தனி மாநிலமாக உருவானது. அதன்பின் 1968 ஆம் ஆண்டு, “தமிழ்நாடு” என பெயர் சூட்டப்பட்டது.
இந்தநிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, “தமிழ்நாடு தினம்” என ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என தொடர்ந்து சட்டப்பேரவையில் தொடர்ந்து கோரிக்கை வைத்து பேசி வந்தார். முதல்வர் மட்டுமின்றி, அமைச்சர் பாண்டியராஜன், பல அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் இன்றைய தினத்தை “தமிழ்நாடு தினம்” என்ற விழாவை அரசே விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில், இது கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
மேலும், நவம்பர் 1 ஆம் தேதியை “தமிழ்நாடு தினம்” என முதல்வர் அறிவித்ததோடு, அந்த கொண்டாட்டங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். இந்நிலையில், இந்த தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் #தமிழ்நாடுநாள்பெருவிழா2020 என்ற ஹாஸ்டாகில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். அதுமட்மின்றி, தமிழக சட்டசபையை மின்விளக்குகளால் அலங்கரித்தும், அரசியல் தலைவர், பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.