தொடர் அமளி.. ஹிந்தி திணிப்பு தீர்மானம்… விசாரணை அறிக்கைகள்.! இன்றைய சட்டபேரவை நிறைவு.!
சட்டப்பேரவை நேற்று இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவினர் அமளி, இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகள், ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு நிறைவடைந்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கி, இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை.
இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுப்பட்டனர். பின்னர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை குழுவினரின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை குழுவினரின் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.