சென்னை:இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94-க்கு விற்பனை.
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
மீண்டும் உயர்வு:
இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 8 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.4.54 ஆகவும் , டீசல் விலையில் ரூ.4.57 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல்,டீசல்:
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல்,டீசல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.அதன்படி,பெட்ரோல் விலை 85 பைசா அதிகரித்து லிட்டருக்கு ரூ. 115.04 மற்றும் டீசல் விலை 75 பைசா அதிகரித்து லிட்டர் ரூ .99.25-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…