பொது போக்குவரத்தை அதிகரிக்கவும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கொண்டுவரப்பட்டது மெட்ரோ ரயில் திட்டம்.இந்த திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன.சுமார் 42 கிலோ மீட்டர் அளவிலான இரண்டு வழித்தடங்களில் திட்டமிடப்பட்டது
டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அதன் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஈநிலையில் மெட்ரோ ரயில் சேவையின் முதல் வழித்தட சேவை முழுமையாக மக்களை கவர மெட்ரோ நிர்வாகம் திங்கட்கிழமை இரவு வரை அனைத்து சேவைகளும் இலவசமாக என்று அறிவித்துள்ளது.