தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா….புதியதாக 17,321 பேர் பாதிப்பு…. 405 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 17,321 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 17,321 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,92,025 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,345 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 405 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,170 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 31,253 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 20,59,597 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,80,750 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,92,43,359 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,04,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025