வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்
இன்று மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது.
தஞ்சையை சோழ சம்ராஜியத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது ஆண்டு சதயவிழா இன்று தஞ்சையில் அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் பெருமையை தஞ்சையில் கோவிலில் காட்டியவர்.இன்றும் உலகம் அதியத்தோடு பார்க்கும் அரசர்.வியப்பூட்டும் அவரின் கட்டக்கலை கம்பீரமாக ஆயிரமாண்டு கடந்து நிமிர்ந்து நிற்கிறது.
பொற்கால ஆட்சியை நடத்திய மன்னர்.போர் களத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த வீரதீர மன்னன் என்றெல்லாம் பெருமைக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன்
அவர் பிறந்த சதயத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜராஜன்சோழரின் சிலையும் அலங்கரிக்கப்பட்டு அழகுற ஜொலிக்கிறது
.இன்று பெரிய கோவிலே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.இன்றைய நாளில் ஒவ்வொருவரும் அவரை நினைப்போம்.