Today Live : கனமழை பாதிப்பு.. பொன்முடி வழக்கு.. முதலமைச்சர் பயணம்…!
வடதமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்த பின்னர், அடுத்து தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத சூழல் நிலவுகிறது . இரு மாவட்ட மக்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 26 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று கனமழை பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் ஏற்கனவே அவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை விவரங்கள் வெளியாக உள்ளது.