Live : புயல் வெள்ள பாதிப்புகள் முதல்… பரபரக்கும் அரசியல் நிகழ்வுகள் வரை..
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடரும் மீட்பு பணிகள் முதல் மத்திய மாநில அரசியல் நிலவரங்கள் வரையில் பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வடதமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை வெளியேற்றும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக விழுப்புரம், கடலூரில் 3 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீர் செய்ய ஏற்கனவே மத்திய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் பேரிடர் நிதியாக கேட்டிருந்த நிலையில், இன்று அது தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு புதிய முதலமைச்சர் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.