Live : திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து முதல்… நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரை…

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் என பல்வேறு செய்திகளை இதில் காணலாம்....

Today Live 13122024

சென்னை : திண்டுக்கல் மாநகராட்சியில் திருச்சி சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று அல்லது நாளை சட்ட மசோதா நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனால் அனைத்து கட்சி எம்பிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்