மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று காலை 10 மணியளவில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.
அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.
இந்த 7-ம் ஆண்டு துவக்க விழாவில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் இதை தொடர்ந்து கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூட்டணி குறித்து சில நாட்களில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் கூட்டணி குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…