இன்று போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள். – பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற பின்னர் திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயன் நெகிழ்ச்சியாக கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நீண்ட வருடங்களாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு சமூகத்தினர் தீண்டாமை கடைபிடித்து வந்துள்ளனர். அதுவும் கடந்த 80 ஆண்டுகளாக இந்த வேதனைக்குரிய நடைமுறை இருந்து வந்துள்ளது.
தீண்டாமை : இதனை, அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல முயற்சிகள் மேற்கொண்டார். இந்த முயற்சிகளில் மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆட்சியர் உத்தரவு : இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பெயரில், திருவண்ணமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பில் பட்டியலின மக்கள் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். பல பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மாவட்ட எஸ்பி நெகிழ்ச்சி : இந்த நிகழ்வு குறித்து பேசிய திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், திருவண்னாமலை மாவட்டத்தில் கடந்த 80 ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோவிலுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்களை, தீண்டாமை ஒழுப்பு தினத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபாடு செய்ய வைத்தோம். இதன் மூலம் பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். உண்மையில் இன்று போலீஸ் அதிகாரியான என் வாழ்க்கையில் மிகவும் திருப்திகரமான நாள். ‘ என மிகவும் நெகிழ்ச்சியாக அந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…