இன்று மிக முக்கிய நாள்…உணர்ச்சிகர வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
மு.க.ஸ்டாலின் : இன்று ஜூலை 18 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடுக்கு தமிழ்நாடு என்ற பெயர் கடந்த 1969 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வைக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை “மதராஸ் ஸ்டேட்” என்ற பெயரில் இருந்து தமிழ்நாடு என்ற பெயரை கொண்டு வந்தார்.
இதனையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அந்த ஆண்டில் இருந்து ஆண்டுதோறும், ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு நாளை ஒட்டி “தமிழ்நாடு வாழ்க” என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலவர் அண்ணாதுரை பேசிய பழைய காணொளியையும், தான் பேசியுள்ள காணொளியையும் இணைத்துள்ளார்.
அதில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” களங்கண்டு, கலை கண்டு, கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்..உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க..ஜூலை 18 தமிழ்நாடு நாள் தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க…தமிழ்நாடு வாழ்க…தமிழ்நாடு வாழ்க” என பேசியுள்ளார்.
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!#வாழ்க_தமிழ்நாடு! pic.twitter.com/fLZt5L3HhL— M.K.Stalin (@mkstalin) July 18, 2024