இன்று சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம்..!

Default Image

சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்.தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரியர்.

பிறப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி சுப்பிரமணிய சிவா பிறந்தார்.1903 ஆம் ஆண்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் என்பவர் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார்.

இளமைக் காலம்:

இவர் 1893 ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார்.பின்னர், மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயிர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார்.

இதனையடுத்து,1899 ஆம் ஆண்டு மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.1905 இல் கர்சன் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது.சுதேச உணர்வு மேலோங்கியது.எங்கும் “வந்தே மாதரம்” எனும் முழக்கங்கள் எழுந்தன.

சுதேச கீதங்கள்:

அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தனது ‘சுதேச கீதங்கள்’ மூலம் அவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.

தொழுநோய் பாதிப்பு:

சென்னை,கொல்கத்தா,தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு சென்று ஆங்கில அரசுக்கு எதிராக தொழிலாளர் போராட்டங்களை நடத்தினார். இதைத்தொடர்ந்து அவர் ஆங்கிலேயே அரசால் கடுமையான சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். மேலும்,சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,தொழுநோயால் பாதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து,பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான நிதியை திரட்ட சிவா முயன்றபோது,அவருக்கு தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ்,ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும்,நிதி திரட்ட உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணம் சென்றார்.

இறப்பு:

இவர் 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தனது 41 ஆவது வயதில் மறைந்தார்.இதனால்,ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23 ஆம் தேதி அவருடைய நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala