மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்!
முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாள்.
மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்லூரி இயக்ககம் அறிவித்துள்ளது. அதாவது, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாளாகும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற்றது என்று மருத்துவ கல்லூரி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தன. இந்த கலந்தாய்வில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பிடிஎஸ் இடங்களும் நிரம்பியது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ, மாணவிகளுக்கு இடங்களை ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. முதல் சுற்று கலந்தாய்வில் இடங்களை ஒதுக்கி ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று கடைசி நாளாகும்.