ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அமைச்சர் அன்பில் மகேஷிற்கு சு.வெங்கடேசன் எம்.பி வேண்டுகோள்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.
இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) எழுதுவதற்கு, கடைசி நாள் 13.4.2022 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக அத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான இயங்குதளம் (Server) முடங்கி உள்ள காரணத்தினால் பலரும் விண்ணப்பிக்க இயலவில்லை. எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…