மாணவர்கள் கவனத்திற்கு… நீட் நுழைவுத்தேர்வு.! இன்றே கடைசி நாள்.!
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக எழுதப்படும் நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது.
இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்த ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று (ஏப்ரல் 6) ஆகும்.
இதுவரை தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நீட் நுழைவு தேர்வில் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் படி, 180 கேள்விகள் இருக்கும். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் மொத்த மதிப்பெண் 720 ஆகும்.