மாணவர்களே.! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
தேசிய தேர்வு முகமையானது(NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட்(NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை (NEET UG) 2023-க்கான விண்ணப்பத்தை கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 6ம் தேதி தொடங்கியது. மே 7ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 499 நகரங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளதாகத் தேசிய தேர்வு முகமை அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நேரம்:
தேர்வர்கள் இன்று இரவு 11.30-க்குள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்ப கட்டணம் அதே நாள் இரவு 11.59 மணிக்குள் முடியாடிகிறது.
தேர்வு நேரம்:
மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை சுமார் 499 நகரங்களில் இந்த நீட் தேர்வானது நடைபெற உள்ளது.