இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!
ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று வடசென்னையில் நடக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு அறிவித்தது. இதன் தொடக்கமாக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஆண்டு முழுவதும் நடக்கும் இந்த கொண்டாட்ட விழாவையொட்டி மாவட்டந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாக்குழு கலந்துரையாடல் கூட்டம்!#கலைஞர்100 pic.twitter.com/ziN1bZLpe0
— DMK (@arivalayam) June 6, 2023