இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது 2-ஆம் கட்ட தேர்தல்! 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு
தமிழகத்தில் இன்று ( ஏப்ரல் 18ஆம் தேதி) மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.
அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.அதேபோல் பரப்புரையும் முடிவு பெற்றது.
இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இன்று இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.இன்று காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது .ஆனால் மதுரையில் மட்டும் சித்திரை திருவிழா காரணமாக இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.