கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150- வது பிறந்த தினம் இன்று..!

Published by
Rebekal

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் 150 ஆவது பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது.

1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இவரது முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. இவர் தனது 6 வயதிலேயே வீரப் பெருமாள் அண்ணாவி என்பவரிடம் தமிழ் கற்றுக் கொண்டுள்ளார். மேலும் கிருஷ்ணன் என்பவரிடம் ஆங்கிலம் பயின்றுள்ளார். அதன் பின்பு தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியிலும், கால்டுவெல் பள்ளியிலும் கல்வி பயின்ற இவர், தாலுகா அலுவலகத்தில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.

அதன் பின் சட்டம் பயின்ற இவர், 1895 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞராக தொழில் ஆற்றியுள்ளார். 1895 ஆம் ஆண்டு வள்ளி அம்மையார் என்பவரை மணந்தார். வள்ளி அம்மையார் 1900 ஆம் ஆண்டு தனது முதல் பிரசவத்திலேயே இறந்து விட்டார். அதன் பின் 19001 ஆம் ஆண்டு  மீனாட்சி அம்மாளை திருமணம் செய்துகொண்டார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி சுதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்த இவர், அந்நிறுவனத்தின் செயலராகவும் பதவி ஏற்று கொண்டுள்ளார்.

அதன் பின்பு விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்த சிதம்பரம் பிள்ளை திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியால் எரிச்சலடைந்த ஆங்கிலேயர்கள் வ.உ.சியை கைது செய்வதற்கு திட்டமிட்டு காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி வ.உ.சி ஆங்கிலேயர்களின் சில நிபந்தனைகளை ஏற்க மறுத்ததால் 1908 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்து மக்கள் கொந்தளித்ததால், போக்குவரத்து மற்றும் பள்ளி கல்லூரிகளில் முடக்கப்பட்டுள்ளது.

அதன் பின்பு அஞ்சல் நிலையம் ஒன்றும் தீ வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  சிறையில் கடுமையாக வேலை செய்த இவருக்கு செக்கிழுத்த செம்மல் என்ற பெயரும் உண்டு. இவர் விடுதலைப் போராட்டத்தில் மட்டுமல்லாமல் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். அதன்பின் 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி இயற்கை எய்தினார். வ.உ.சி நினைவை போற்றும் விதமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பும், திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயிலிலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெரீனா கடற்கரை, தூத்துக்குடி துறைமுகம், மதுரை சிம்மக்கல், திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம் முன்பும் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வ உசி நூற்றாண்டு விழாவின் போது, முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் 1972 ஆம் ஆண்டு அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. தற்பொழுதும் இன்று வ.உ.சியின் 150 வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சி சாலை எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

58 minutes ago
பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago