இன்று மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா நடைபெறுகிறது.!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு இந்த கொரோனா காலத்தின் வெறுமையை போக்க ஒரு சிறப்பான வழியை விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இன்று (20.09.2020) மெகா டெக்னாலஜி விர்ச்சுவல் விழா ஒன்றை இவர்கள் நடத்த உள்ளனர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பல வகையான இலவச – கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய பலவித ஆன்லைன் தொழிற்நுட்ப நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் உங்களுக்கு பிடித்த எந்த மென்பொருளை வேண்டுமானாலும் இந்த குழுவினர்கள் சொல்லி தருவார்கள். மேலும் இந்த மென்பொருட்களை எப்படி இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் விளக்குவார்கள்.
எதற்காக கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதத்தில் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் தினம் தான் “கட்டற்ற மென்பொருள் தினம்”. ஆங்கிலத்தின் “Software Freedom Day” என்று சொல்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் இணையத்தின் பயன் மட்டும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கொண்டாட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு (Villupuram GNU/Linux Users Group) ஒவ்வொரு ஆண்டும் இந்த மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
எப்படி கலந்துகொள்வது?
கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக இந்த நிகழ்வை நடத்த இக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். மென்பொருள் கண்காட்சியில் நீங்களும் பங்குபெற, என்கிற லிங்க்-ஐ கிளிக் செய்து உள்ளே நுழைந்து, “Visit Stalls” என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இதன் பிறகு நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மென்பொருட்களுக்கான “link” கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையுங்கள். உங்களுக்கு வேறு ஏதேனும் உதவி தேவை என்றால், “Help Desk” என்பதை கிளிக் செத்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு கால் செய்யலாம்.
நோக்கம் என்ன?
இந்த ஆன்லைன் விழாவின் வழியாக மக்களிடம் மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களை நேரடியாக அறிஞர்களுடன் இணைந்து புரிந்துகொள்வதற்கான சிறந்த மேடையாக இது அமையும். பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்களிடத்தில் மென்பொருட்கள் பற்றிய விழிப்புணர்வையும், பாதுகாப்பையும் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இக்குழுவின் நோக்கம் என்று அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து மென்பொருள்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025