தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்.
ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும். இந்த நாள் நிழலில்லா நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மதிய நேரத்தில் நமது நிழலை பார்க்க முடியாத அளவுக்கு, நிழல் நமது காலின் அடியில் விழும். இந்த நாளானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நாள் வந்தது. இரண்டாம் முறையாக, ஆகஸ்ட் மாதம் ஆன இன்று மதியம் இதனை காண முடியும். ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் இந்த நாளை காண முடியும். மேலும் சென்னையிலுள்ள கோட்டூர்புரத்தில் பிர்லா கோளரங்கத்தில் இந்த நாள் குறித்து விளக்கம் அளிக்கவும் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…